Wednesday, June 4, 2008

ஊஞ்சல்

03.06.2008 செவ்வாக் கெயம செல் அட்ச்து. ஆருன்னு பாக்க சொல்லோ ஊஞ்சல்னு கீதுபா. இன்னா மேட்டர்னா கோயமுத்தூர்ல கிஸ்னா சுவீட்சு காரங்க அதாம்பா வாயில போட்டுகினா ஸொம்மா சல்லுனு கரையுமே மசூப்பாக்கு அவுங்கதான் - ஒவ்வொரு மாசமும் மொதோ செவ்வாயில எலக்கிய ஆலுங்க ஒரு 25 பேர வெச்சுக் கூட்டம் போட்டுனு கீறாங்கோ!

சாயரட்சை 7 மணிக்கா நானும் அங்கே பிரசன்ட் குட்த்தேன்.

பெரீய பெரீய் ஆலுங்கல்லாம் இர்ந்தாங்கப்பா. ஊஸ்டன்ல இர்ந்து கெணெசன் அப்டிங்றவர், அப்பால நானசம்மந்தம் அதாம்பா ஜெயா டீவிலே சோக் அடிப்பாரே அவரு எல்லம் இர்ந்தாங்கோ.

நாஞ்சில் நாடன்னு பெரிய ரைட்டராமே அவரும் இந்தாருப்பா.

அப்பதான்பா ஒன்னு கெவுனிச்சேன். பிளாக்குலே பிரிச்சு மேஞ்சினு கீற ரெண்டு மூணு பேர பாத்தம்பா.

அப்பநாய்க்கம்பாளையம் அரங்க. முத்துச்சாமி டிப்பன் செக்சனாண்ட வுட்டு நவுரவேயில்ல. செம கட்டு கட்டினுருந்தாரு. அவரோட கெட்டப்ப வெச்சு அவர அடையாலங் கண்டுகினேன்.

லதானந்து, பழ. சந்திரசேகரன், இவுங்கெல்லாம் ரொம்ப சீரியஸாக் கெவுனிசினுருந்தாங்க.

வடகரை வேலன்ற பதிவரும் வந்திருந்தாரு.

ஆரோ மரபின் மைந்தன் முத்தையாவாமே! அவுருதாம்பா கூட்டத்த ஒயுங்கு பண்ணிகினுந்தாரு.

ஊஸ்டன் கெணேசன் பெரிய வின்னானியாமே! நாசாவுல கீறாராம். ஆலு பாக்க சோக்கா சினி ஆக்டர் கணுக்கா கீறாரு. ஒரே கமெடியாவும் பேசினாருபா. நெரிய உபயோகமான வெசயமெல்லாம் பேசினாரு. கம்ப்யூட்டரையும் தமில் மொயியையும் சேத்து என்னென்னலாம் பண்ணலாம்னு டீடெய்லா எட்த்து வுட்டாரு. நெரிய சுகுரானா பொஸ்தகமெல்லாம் அவராண்ட கீதுப்பா. அவரு வூட்டு ஃபிரிட்ஜத் தொறந்தாலும் புக்ஸ்தா இக்குமாம்.

பின்னாண்ட நான்சம்பந்தம் லெச்சர் குட்தாரு. சோக்காப் பேசுனாரு. சாம்பிளுக்கு ஒன்னு தரவா?

"ஒரு வின்னானி சொன்னானாம். "நாலைக்கு ஒலகமே அயிஞ்சு பூடும்"

அவம் பொண்டாட்டி கேட்டாளாம். "அப்ப கோலங்கள் சீரியல் பாக்க முடியாதா?"

கடேசியா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க.முத்துச்சாமியாண்ட கேட்டேன்.

"இன்னாபா எப்டி இர்ந்துது?"

"ரவா இட்லியும், ஊத்தப்பமும், வடையும், தயிர் சாதமும் ஆகச் சிறப்பாக அமைந்தன நண்பரே" ன்னாருபா!

1 comment:

☼ வெயிலான் said...

'மாரி' ன்ற பேர் தான் ரி ஆயிடுச்சோ. நல்லா எழுதுறீங்க.

அப்படியே நம்ம பதிவை படிச்சுட்டு கருத்து சொல்லுங்க ரி.